கொஞ்ச நேரம் கேளாயோ
என் வாழ்வின் கதைகளை இயேசையா (2)
பலவீனமான பாவி நான் கடைக்கண் திறந்து பாருமையா
ஒரு தந்தையைப் போல் என்னை மன்னித்திடு
வாழ்விலே என்னை நடத்திவிடு
நீரே எனக்கு சரணமையா நீரே எனக்கு அபயமையா
எந்தன் வாழ்வில் துணையுமையா
எனக்கு நீரே அனைத்துமையா (2)
1. மனதிலே வேதனை வரும்போது
அன்புடன் என்னை அணைத்துவிடு (2)
நெஞ்சிலே தோன்றும் கவலையெல்லாம்
ஆறுதல் மொழியால் அகற்றிவிடு (2)
நீரே எனக்கு சரணமையா
2. தனிமையில் வாடிடும் என் நிலையை
தயவுடன் இரங்கி பார்த்துவிடு (2)
கண்ணீரைத் துடைத்து மகிழ்வளிக்க
உன் திருப்பார்வையைப் பதித்துவிடு (2)
நீரே எனக்கு சரணமையா
konja naeram kaelaayo
en vaazhvin kadhaigalai iyaesaiyaa (2)
palaveenamaana paavi naan kadaikkan thirandhu paarumaiyaa
oru thandhaiyaip pol ennai manniththidu
vaazhvilae ennai nadaththividu
neerae enakku saranamaiyaa neerae enakku abayamaiyaa
endhan vaazhvil thunaiyumaiyaa
enakku neerae anaiththumaiyaa (2)
1. manadhilae vaedhanai varumbodhu
anbudan ennai anaiththuvidu (2)
nenjilae thondrum kavalaiyellaam
aarudhal mozhiyaal agatrividu (2)
neerae enakku saranamaiyaa
2. thanimaiyil vaadidum en nilaiyai
thayavudan irangi paarththuvidu (2)
kanneeraith thudaiththu magizhvalikka
un thiruppaarvaiyaip padhiththuvidu (2)
neerae enakku saranamaiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.