கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது
1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது
இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது
2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது
kalaimaan neerodaiyai aarvamaai naadudhal pol
iraiva en nenjam maravaadhu unnai
yengiyae naadi varugindradhu
1. uyirulla iraivanil thaagam kondalaindhadhu
iraiva unnai endru naan kaanbaen
kanneerae endhan unavaanadhu
2. makkalin koottaththodu vizhaavil kalandhaene
akkalippodu ivatrai naan ninaikka
en ullam paagaai vadigindradhu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.