கண்ணுக்குள் கருவிழியாய் நெஞ்சுக்குள்

kannukkul karuvizhiyaai nenjukkul

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கண்ணுக்குள் கருவிழியாய் நெஞ்சுக்குள் எனைத்தாங்கி கரங்களில் என் பெயர் பொறித்த இறைவா (2) - உனை உயிரோடு இணைத்து உறவாகக் கொண்டு உளமாரச் சொல்வேன் வாழ்வாலே நன்றி 1. மண்ணுக்குள் நீ தந்த கொடையென்னும் வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் நிதம் பொழிகின்றாய் விண்ணுக்குள் நான் வந்து உனைக்காண நினைத்தால் மண்மீது மனிதத்தின் மாண்பாய் உள்ளாய் உன்னோடு நான் வாழும் உயிருள்ள நாள் வரையில் உன்பாசப் பணியாகி உயர்நன்றி நானாக (2) இறைவா நன்றி இனிதாய் நன்றி நிறைவாய் நன்றி நானே நன்றி (2) 2. அன்புக்குள் புவி வாழும் உன் ஏக்கப் பணியாற்ற ஆக்கத்தின் அருள் அனலாய் உனைத் தருகிறாய் இறக்கின்ற நீதிக்கு உயிர் மூச்சு நானாக இதயத்தை நீ இயக்கி எனில் வாழ்கிறாய் உனைப்போல நான்தேடும் உயர்வான நோக்கங்கள் உலகெங்கும் செயலாக்கி உயிர்நன்றி உயிராலே (2) இறைவா நன்றி இதயா நன்றி உறவாய் நன்றி உயிராய் நன்றி (2)
kannukkul karuvizhiyaai nenjukkul enaiththaangi karangalil en peyar poriththa iraiva (2) - unai uyirodu inaiththu uravaagak kondu ulamaarach solvaen vaazhvaalae nandri 1. mannukkul nee thandha kodaiyennum vaazhvil ennatra nanmaigal nidham pozhiginraai vinnukkul naan vandhu unaikkaana ninaiththaal manmeedhu manidhaththin maanbaai ullaai unnodu naan vaazhum uyirulla naal varaiyil unbaasap paniyaagi uyarnandri naanaaga (2) iraiva nandri inidhaai nandri niraivaai nandri naane nandri (2) 2. anbukkul puvi vaazhum un yekkap paniyaatra aakkaththin arul analaai unaith tharugiraai irakkindra needhikku uyir moochchu naanaaga idhayaththai nee iyakki enil vaazhgiraai unaippola naandhaedum uyarvaana nokkangal ulagengum seyalaakki uyirnandri uyiraalae (2) iraiva nandri idhayaa nandri uravaai nandri uyiraai nandri (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.