ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
1. மூடத் துணியில்லையோ இந்த மாடடையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
2. தந்தைக்குத் தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ
yedhukkazhugiraai nee yezhai maadhu naan enna seivaen
vaadaiyadikkiradho paalaa kulirum porukkalaiyo
1. moodath thuniyillaiyo indha maadadaiyung kottililae
vaadaiyadikkiradho paalaa kalangith thavikkiraayo
2. thandhaikkuth thachchu vaelai un thaayum eliyavalae
indha maasangadaththil paalaa enna perumaiyundu
3. illaadha yezhaigatku inbam ellaam alikka vandha
selvamae neeyazhudhaal yezhai maadhu naan enna seivaen
4. jodhiyae sundharamae manu jaadhiyai meetka vandha
naadhane nee azhudhaal indha naadum siriyaadho
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.