எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றிடுதே - 2
இந்த அடிமை என்னை அவர் நினைந்ததனால்
அந்த மீட்பரில் நெஞ்சம் மகிழ்கின்றதே
1. வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் தினம் எனை வாழ்த்திடுமே
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க
அவர் தம் கரம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்
2. அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செருக்கடைந்தோரைச் சிதறடித்தார் - அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்திவிட்டார்
பசித்தோரைப் பல நலன்கொண்டு நிறைத்து
செல்வரை வெறுங்கையரென விடுத்தார்
endhan aanmaa aandavarai yetrippotridudhae - 2
indha adimai ennai avar ninaindhadhanaal
andha meetparil nenjam magizhgindradhae
1. vallavar enakkaai periyana purindhaar
vaiyagam thinam enai vaazhththidumae
arul niraindha mariye vaazhga aandavar ummudane
pengalukkullae perum paerubetreer
vaazhga mariye vaazhga
avar tham karam panivor thalaimuraikkellaam
thayavarulvaar avar thooyavaraam
2. avar thamadhaatral karaththinai neetti
serukkadaindhoraich sidharadiththaar - avar
valiyorai uyar irukkaiyindrirakki
eliyorai miga uyarththivittaar
pasiththoraip pala nalangondu niraiththu
selvarai verungaiyarena viduththaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.