உள்ளம் மகிழ உறவு

ullam magizha uravu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உள்ளம் மகிழ உறவு வளர உணவாய் வந்த தெய்வமே உயிரைத் தந்த நாதனே உள்ளம் மகிழ உறவு வளர உணவு வந்தது உலகம் எங்கும் மனிதம் வாழ உயிரைத் தந்தது (2) நலம் அளிக்கும் அருமருந்தாய் நாளும் நமைக் காக்கும் வானின் விருந்தாய் (2) 1. நிலவுள்ள வானத்தில் நிலைத்திடும் பேரொளி கனிவுள்ள நெஞ்சத்தில் உதிக்கும் அருள்மொழி நிறமுள்ள பூக்களில் மலர்ந்திடும் அழகொளி நிறைவுள்ள நெஞ்சத்தில் பிறக்கும் நிம்மதி உள்ளம் தூய்மை கண்டிட வழி சொன்னாய் உலகில் அமைதி நிலவிட உனைத் தந்தாய் (2) இறைவா என்னில் எழுந்து வா உனதாய் என்னை மாற்ற வா 2. துயருறும் வேளையில் கலங்கிடும் கண்களை துடைத்திடும் உறவென்று உன்னைக் காண்கிறேன் சுற்றமும் சொந்தமும் கைவிடும் பொழுதினில் சிறகினில் அணைந்திடும் அன்பில் நனைகிறேன் உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திட சுகம் தந்தாய் உண்மை நீதி காத்திட அருள் ஈந்தாய் (2) நாளும் நன்றி பாடுவேன் நலமாய் உன்னில் வாழுவேன்
ullam magizha uravu valara unavaai vandha deivame uyiraith thandha naadhane ullam magizha uravu valara unavu vandhadhu ulagam engum manidham vaazha uyiraith thandhadhu (2) nalam alikkum arumarundhaai naalum namaik kaakkum vaanin virundhaai (2) 1. nilavulla vaanaththil nilaiththidum paeroli kanivulla nenjaththil udhikkum arulmozhi niramulla pookkalil malarndhidum azhagoli niraivulla nenjaththil pirakkum nimmadhi ullam thooimai kandida vazhi sonnaai ulagil amaidhi nilavida unaith thandhaai (2) iraiva ennil ezhundhu vaa unadhaai ennai maatra vaa 2. thuyarurum vaelaiyil kalangidum kangalai thudaiththidum uravendru unnaik kaangiraen sutramum sondhamum kaividum pozhudhinil siraginil anaindhidum anbil nanaigiraen ullam magizhndhu vaazhndhida sugam thandhaai unmai needhi kaaththida arul eendhaai (2) naalum nandri paaduvaen nalamaai unnil vaazhuvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.