உறவின் உயிராக அருளின்

uravin uyiraaga arulin

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உறவின் உயிராக அருளின் நிறைவாக வாழ்வை வழங்கும் நல் இயேசுவே அருளைப் பொழிந்திடும் ஆற்றல் தந்திடும் அழியா உணவென்னில் வாருமே உந்தன் வார்த்தையே வாழ்வாகுமே என்னில் உந்தன் பாதையே வழியாகுமே (2) வாரும் தேவா என்னில் வாரும் தேவா குணமாக்க என்னில் வாரும் தேவா உமதாற்றல் என்னில் தாரும் தேவா 1. சோகங்கள் சுமையாகி தடுமாறும்போது சிறகாக என்னை நீ மூடினாய் பாவங்கள் பலகோடி நான் செய்த போதும் பாசத்தால் என்னை நீ தேடினாய் (2) நீ வாழும் காலம் இனிதாக வாழ உன்னோடு இணைய ஆசிக்கின்றேன் நீ தந்த வாழ்வில் உமக்காக வாழ உன்னோடு வாழ யாசிக்கின்றேன் - 2 2. நட்பென்னும் வானத்தில் இருள் சூழ்ந்தபோது உறவென்னும் கீதமாய் உருவாகினாய் அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரம் ஒளியாக எழுந்து உறவாடினாய் ஊரெங்கும் சென்று உன் நாமம் சொல்லி உன் அன்பில் எங்கும் நிலையாகுவேன் முதலான வாழ்வும் முடிவில்லா வாழ்வும் உன் நாமம் என்றும் நான் பாடுவேன் - 2
uravin uyiraaga arulin niraivaaga vaazhvai vazhangum nal yesuve arulaip pozhindhidum aatral thandhidum azhiyaa unavennil vaarumae undhan vaarththaiyae vaazhvaagumae ennil undhan paadhaiyae vazhiyaagumae (2) vaarum thaevaa ennil vaarum thaevaa kunamaakka ennil vaarum thaevaa umadhaatral ennil thaarum thaevaa 1. sogangal sumaiyaagi thadumaarumbodhu siragaaga ennai nee moodinaai paavangal palagodi naan seidha podhum paasaththaal ennai nee thaedinaai (2) nee vaazhum kaalam inidhaaga vaazha unnodu inaiya aasikkinraen nee thandha vaazhvil umakkaaga vaazha unnodu vaazha yaasikkinraen - 2 2. natpennum vaanaththil irul soozhndhabodhu uravennum keedhamaai uruvaaginaai anbennum theebangal anaigindra naeram oliyaaga ezhundhu uravaadinaai oorengum sendru un naamam solli un anbil engum nilaiyaaguvaen mudhalaana vaazhvum mudivillaa vaazhvum un naamam endrum naan paaduvaen - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.