உயிருள்ள உணவான நன்மைநாதரே

uyirulla unavaana nanmainaadhare

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உயிருள்ள உணவான நன்மைநாதரே உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகின்றோம் பரலோக மன்னாவாகிய நன்மைநாதரே நிறைவாழ்வு தருகின்ற நிறைவான நன்மைநாதரே ஆன்ம உணவான நன்மைநாதரே அப்பவடிவில் எழுந்தருள்கின்ற நன்மைநாதரே பரலோக பயண உணவான நன்மைநாதரே என்றும் அழியாத உணவான நன்மைநாதரே பரலோகத்தை வெளிப்படுத்தும் நன்மைநாதரே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த நன்மைநாதரே உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் நன்மைநாதரே என்றும் வாழச் செய்கின்ற நன்மைநாதரே உலகு வாழ்வதற்காய் உணவான நன்மைநாதரே இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்யும் நன்மைநாதரே இறை அரவணைப்பை தருகின்ற நன்மைநாதரே பசியைப் போக்கும் உணவான நன்மைநாதரே உண்மையான உணவான நன்மைநாதரே உலகுக்கு வாழ்வு தரும் நன்மைநாதரே கடவுள் தரும் உணவான நன்மைநாதரே அழியாத உணவான நன்மைநாதரே பாஸ்கா விருந்தான நன்மைநாதரே இறையாட்சியின் விருந்தான நன்மைநாதரே இயேசுவின் உடலான நன்மைநாதரே உண்பதற்காக தரப்பட்ட உணவான நன்மைநாதரே ஆட்டுக்குட்டியின் திருமண விருந்தான நன்மைநாதரே பேறுபெற்றோரின் உணவான நன்மைநாதரே கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ள செய்யும் நன்மைநாதரே அனைவரையும் ஓருடலாய் இணைக்கின்ற நன்மைநாதரே ஆண்டவரின் திருவிருந்தான நன்மைநாதரே ஆண்டவரின் சாவை அறிக்கையிடச் செய்யும் நன்மைநாதரே அவர் வருகை வரை அறிவிக்கச் செய்யும் நன்மைநாதரே தகுதியான நிலையில் உட்கொள்ளப் பணித்த நன்மைநாதரே என்னை சோதித்தபின் உட்கொள்ள சொல்கின்ற நன்மைநாதரே தகுதியோடு உண்டால் வலிமை தருகின்ற நன்மைநாதரே தகுதியோடு உண்டால் நலம் தருகின்ற நன்மைநாதரே தகுதியோடு உண்டால் தீர்ப்பிலிருந்து விடுவிக்கும் நன்மைநாதரே எம்மாவு சீடர்களின் கண்களைத் திறந்த நன்மைநாதரே உடைக்கப்பட்ட அப்பமாகிய நன்மைநாதரே பலியாகி உணவான நன்மைநாதரே இதயக் கதவை தட்டுகின்ற நன்மைநாதரே கதவைத் திறந்தால் எழுந்தருள்கின்ற நன்மைநாதரே எம்மோடு உணவு அருந்துகின்ற நன்மைநாதரே நாங்கள் உம்மோடு உணவு அருந்தச் செய்கின்ற நன்மைநாதரே வாழ்வுதரும் மரத்தின் கனியாகிய நன்மைநாதரே வெற்றி பெறுவோர்க்கு உண்ண தருகின்ற நன்மைநாதரே எங்கள் அன்றாட உணவாக வருகின்ற நன்மைநாதரே அற்புதமான உணவான நன்மைநாதரே எல்லா இனிமையும் கொண்ட உணவான நன்மைநாதரே பல்சுவையும் கொண்ட உணவான நன்மைநாதரே கடவுளின் இனிய உணவை வெளிப்படுத்தும் நன்மைநாதரே உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் நன்றி செலுத்துகின்றோம்
uyirulla unavaana nanmainaadhare ummai aaraadhikkinrom aaraadhikkinrom nandri seluththuginrom paraloga mannaavaagiya nanmainaadhare niraivaazhvu tharugindra niraivaana nanmainaadhare aanma unavaana nanmainaadhare appavadivil ezhundharulgindra nanmainaadhare paraloga payana unavaana nanmainaadhare endrum azhiyaadha unavaana nanmainaadhare paralogaththai velippaduththum nanmainaadhare vinnagaththilirundhu irangi vandha nanmainaadhare unbavarai iravaamal irukkach seiyum nanmainaadhare endrum vaazhach seigindra nanmainaadhare ulagu vaazhvadharkaai unavaana nanmainaadhare irudhi naalil uyirththezhach seiyum nanmainaadhare irai aravanaippai tharugindra nanmainaadhare pasiyaip pokkum unavaana nanmainaadhare unmaiyaana unavaana nanmainaadhare ulagukku vaazhvu tharum nanmainaadhare kadavul tharum unavaana nanmainaadhare azhiyaadha unavaana nanmainaadhare paaskaa virundhaana nanmainaadhare iraiyaatchiyin virundhaana nanmainaadhare yesuvin udalaana nanmainaadhare unbadharkaaga tharappatta unavaana nanmainaadhare aattukkuttiyin thirumana virundhaana nanmainaadhare paerubetrorin unavaana nanmainaadhare christhuvin udalil pangugolla seiyum nanmainaadhare anaivaraiyum orudalaai inaikkindra nanmainaadhare aandavarin thiruvirundhaana nanmainaadhare aandavarin saavai arikkaiyidach seiyum nanmainaadhare avar varugai varai arivikkach seiyum nanmainaadhare thagudhiyaana nilaiyil utkollap paniththa nanmainaadhare ennai sodhiththabin utkolla solgindra nanmainaadhare thagudhiyodu undaal valimai tharugindra nanmainaadhare thagudhiyodu undaal nalam tharugindra nanmainaadhare thagudhiyodu undaal theerppilirundhu viduvikkum nanmainaadhare emmaavu seedargalin kangalaith thirandha nanmainaadhare udaikkappatta appamaagiya nanmainaadhare paliyaagi unavaana nanmainaadhare idhayak kadhavai thattugindra nanmainaadhare kadhavaith thirandhaal ezhundharulgindra nanmainaadhare emmodu unavu arundhugindra nanmainaadhare naangal ummodu unavu arundhach seigindra nanmainaadhare vaazhvudharum maraththin kaniyaagiya nanmainaadhare vetri peruvorkku unna tharugindra nanmainaadhare engal anraada unavaaga varugindra nanmainaadhare arpudhamaana unavaana nanmainaadhare ellaa inimaiyum konda unavaana nanmainaadhare palsuvaiyum konda unavaana nanmainaadhare kadavulin iniya unavai velippaduththum nanmainaadhare ummai aaraadhikkinrom aaraadhikkinrom nandri seluththuginrom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.