உயிரின் உயிரே இறைவா

uyirin uyirae iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய் வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட 1. உலகம் வாழ நீயும் உந்தன் உடலைச் சிதைத்து உறவுப் பலியாய் உன்னைத் தந்தாய் உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து உலகை மாற்றும் துணிவைத் தாராய் உன் அன்புப் பாதைகள் என் வாழ்வின் பாடங்கள் உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள் உலகெலாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா 2. கருணை மொழிகள் பேசி கனிவுச் செயல்கள் காட்டி கடவுள் ஆட்சி கனவைத் தந்தாய் காணும் உயிர்கள் யாவும் கடவுள் உருவைக் காணும் புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய் இறையாட்சிக் குடும்பமாய் இவ்வுலகம் அமைந்திட நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட
uyirin uyirae iraiva unavin vadivil varuvaai vaadum ullam ennaith thaetra vaa vaazhvin paadhai naalum maatra vaa unnarul varugaiyil ulagamae magizhndhida 1. ulagam vaazha neeyum undhan udalaich sidhaiththu uravup paliyaai unnaith thandhaai unadhu vazhiyil naanum enadhu vaazhvai udaiththu ulagai maatrum thunivaith thaaraai un anbup paadhaigal en vaazhvin paadangal un arul vaarththaigal en vaazhvin thaedalgal ulagelaam magizhndhida ullaththil nee vaa 2. karunai mozhigal paesi kanivuch seyalgal kaatti kadavul aatchi kanavaith thandhaai kaanum uyirgal yaavum kadavul uruvaik kaanum pudhiya nerigal vaguththuth thandhaai iraiyaatchik kudumbamaai ivvulagam amaindhida needhiyin paadhaiyil maanudam vaazhndhida
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.