உமது ஆவியை விடுத்தருளும்

umadhu aaviyai viduththarulum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உமது ஆவியை விடுத்தருளும் ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும் 1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர் மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர் 2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர் அது எந்நாளும் அசையவே அசையாது கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர் வெள்ளப்பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர் 3. நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்க கட்டளை இடுகிறீர் அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர் அவற்றினருகே வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன 4. உம் உள்ளத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர் உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர் மனிதருக்குப் பயன்பட பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர் 5. ஆண்டவரே உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம் நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக அல்லேலூயா
umadhu aaviyai viduththarulum aandavare boomiyin mugaththaip pudhuppiththarulum 1. nenjae nee aandavarai vaazhththuvaayaaga aandavare en iraiva neer eththunai uyarndhavar maanbum magaththuvamum neer anindhirukkinreer 2. boomiyai neer adiththalaththin meedhu amaiththeer adhu ennaalum asaiyavae asaiyaadhu kadalgalai adharku udaiyenath thandhirukkinreer vellapperukku malaigalai moodiyirukkumbadi seidheer 3. neerootrukal aarukalaaip perukkedukka kattalai idugireer alaigalidaiyae avaigalai odach seigireer avatrinaruge vaanaththup paravaigal kudiyirukkindrana marakkilaigalidaiyae innisai ezhuppugindrana 4. um ullaththilirundhu malaigal meedhu neer paayach seigireer um seyalgalin payanaal maanilam niraivurugindradhu kaalnadaigal unnap pul mulaikkach seigireer manidharukkup payanbada payir pachchaigal valarach seigireer 5. aandavare um vaelaippaadugal eththanai eththanai anaiththaiyum neer njaanaththodu seidhu mudiththeer um padaippugalaal niraindhulladhu vaiyagam nenjae nee aandavarai vaazhththuvaayaaga alleluya
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.