அன்பு நிறைந்த ஆயனாய்

anbu niraindha aayanaai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அன்பு நிறைந்த ஆயனாய் இறைவன் என்னை வழிநடத்த என்றும் வாழ்வில் இன்பமே குறைகள் எனக்கு இல்லையே 1. பசும்புல் நிறைந்த பூமியில் பசியை ஆற்ற செய்கின்றார் அமைதி நிறை நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் எனக்குப் புத்துயிர் அளிக்கின்றார் 2. எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார் எனது தலையில் ஆவியின் நறுமணத் தைலம் பூசுகின்றார் என் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குதம்மா
anbu niraindha aayanaai iraivan ennai vazhinadaththa endrum vaazhvil inbamae kuraigal enakku illaiyae 1. pasumbul niraindha boomiyil pasiyai aatra seiginraar amaidhi nirai neernilaigalukku ennai azhaiththuch selginraar enakkup puththuyir alikkinraar 2. edhirigal kanmunne enakkoru virundhinai yerpaadu seiginraar enadhu thalaiyil aaviyin narumanath thailam poosuginraar en nenjaththil magizhchchi pongudhammaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.