உன்னத தேவனவர் - நம்மை
படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே
1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை
பாடுதல் நல்லதுவே
கனிவுடன் பாடலில் வீணையும் யாழும் மீட்டிட
பாடுதல் நல்லதுவே
2. ஆண்டவர் மாபெரும் செயல்கள் அனைத்தும்
அறிவிலி அறிவதில்லை
பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும்
பாவங்கள் அவர்களை விடுவதில்லை
3. மகிழ்வுறும் செய்தியை என் மனம் குளிர
இறைவன் எனக்களித்தார்
மாமரம் கேதுரு போலவே வளர்ந்து
நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்
unnadha thaevanavar - nammai
padaiththavar aalbavar aandavar avarae
1. kaalaiyum maalaiyum kadavulin maenmai
paadudhal nalladhuvae
kanivudan paadalil veenaiyum yaazhum meettida
paadudhal nalladhuvae
2. aandavar maaberum seyalgal anaiththum
arivili arivadhillai
paavigal sezhippudan vaazhndhirundhaalum
paavangal avargalai viduvadhillai
3. magizhvurum seidhiyai en manam kulira
iraivan enakkaliththaar
maamaram kaedhuru polavae valarndhu
needhiyil vaazhndhidach seiginraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.