உன் தேவன் உன்னோடு

un devan unnodu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார் உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோஷம் வாழ்வில் கூடும் துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும் 1. பாலைநிலத்தில் மன்னாவைப் பொழிந்து ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார் அவரின் சமூகம் முன்பாக செல்லும் தீமைகள் உன்னை அணுகாது இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களை பனிபோல் மறைந்திட செய்திடுவார் உலகம் முடியும் வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார் 2. துணையாக வந்து தோள் மீது சுமந்து தினந்தோறும் உன்னைப் பாதுகாப்பார் காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம் கரிசனையோடு ஒளியாவார் தனிமையில் தவிக்கும் போதினிலே நம்பிக்கையூட்டி நலம் தருவார் வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார்
un devan unnodu irukkinraar anjaadhae kalangaadhae oorellaam unnai odhukkinaalum un devan vilagamaattaar un thukkangal ellaam maarum sandhosham vaazhvil koodum thuyarangal ellaam maraiyum nenjinil nimmadhi niraiyum 1. paalainilaththil mannaavaip pozhindhu aandavar unakku nanmai seivaar avarin samoogam munbaaga sellum theemaigal unnai anugaadhu imayam pol soozhndhidum thuyarangalai panibol maraindhida seidhiduvaar ulagam mudiyum varai uyirulla devan udaniruppaar 2. thunaiyaaga vandhu thol meedhu sumandhu thinandhorum unnaip paadhugaappaar kaarirul soozhndhu thadumaarum naeram karisanaiyodu oliyaavaar thanimaiyil thavikkum podhinilae nambikkaiyootti nalam tharuvaar vaazhvikkum nallaayanaai vallamaiyodu nadaththiduvaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.