இறைவா உம்மை யாம்

iraiva ummai yaam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறைவா உம்மை யாம் போற்றிப் புகழ்கின்றோம் ஆண்டவர் நீர் என்று ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் வாழும் தந்தாய் உம்மை எல்லா உலகும் பணிகின்றது விண்ணும் மண்ணும் வாழும் எல்லா தூதரணிகளுடன் பலவத்தர் பக்தி சுவாலகருடன் ஞானாதிக்கரும் தூயவர் தூயவர் துயவராம் மூவுலகின் தேவன் 1. தாவியே வழியுது விண்மண் மீது உம் பெருமையின் மாட்சி இன்னிசை ஒன்றே இடையறா தெழுப்பி இறைவா உம் புகழ் பாடுவரே 2. எல்லையில் மாட்சியின் தந்தை நீர் என்று சொல்லுவர் புகழ்மிகு அப்போஸ்தலர் போற்றுவர் வியத்தகு இறைவாக்கினர் வாழ்த்துவர் வெண்ணாடை வேதசாட்சிகள் எங்குமே நிறைந்திடும் தூய திருச்சபை என்றும் நின் மாட்சியை வெளிப்படுத்தும் 3. உமதுண்மை ஏக மகனான கிறிஸ்துவையும் தேற்றிடும் தூய ஆவியையும் ஆராதிக்கின்றோம் கிறிஸ்துவே நீரே மாட்சிமிக்க வேந்தன் நீரே தந்தையின் என்றும் வாழும் இணையில்லா மைந்தன் மனிதனை மீட்க கன்னியின் உதரத்தில் கருவாக நீர் தயங்கவில்லை மரணத்தின் கொடுக்கை வென்றே நீர் விண்ணரசை விசுவாசிகளுக்குத் திறந்துவிட்டீர் தந்தையின் மாட்சியில் இறைவனின் வலப்பக்கம் வீற்றிருப்பவர் நீரே எங்களைத் தீர்ப்பிட வருபவர் நீரென விசுவசிக்கின்றோம் 4. ஆகவே விலையிலாக் குருதியை கொண்டு மீட்ட உம் அடியார்க்கு அருள்புரியும் முடியா மாட்சியில் புனிதர்களோடு என்றுமே இவர்களை இணைத்தருளும் ஆண்டவரே உம் மக்களைக் காத்து உமதுடைமையை ஆசீர்வதியும் 5. அவர்களை ஆட்சிசெய் தென்றென்றும் பெருங்குலமாக மேன்மைப் படுத்தியருளும் ஒவ்வொரு நாளும் உம்மைப் புகழ்கின்றோம் என்றென்றும் உமது புகழைப் பாடுகின்றோம் 6. இன்று நாங்கள் பாவத்தை விட்டு விலகி வாழத் துணைபுரியும் எங்கள் மீது இரக்கமாயிரும் இரக்கமாயிரும் ஆண்டவரே 7. ஆண்டவரே உம் கருணையின் பார்வை எம்மீது நிலைக்கட்டும் ஏனெனில் உம்மையே நம்பினோம் உம்மையே நம்பினோம் ஆண்டவரே என்றுமே கலங்க மாட்டோம்
iraiva ummai yaam potrip pugazhginrom aandavar neer endru yetrukkolginrom endrum vaazhum thandhaai ummai ellaa ulagum panigindradhu vinnum mannum vaazhum ellaa thoodharanigaludan palavaththar pakthi suvaalagarudan njaanaadhikkarum thooyavar thooyavar thuyavaraam moovulagin devan 1. thaaviyae vazhiyudhu vinman meedhu um perumaiyin maatchi innisai onrae idaiyaraa thezhuppi iraiva um pugazh paaduvarae 2. ellaiyil maatchiyin thandhai neer endru solluvar pugazhmigu apposthalar potruvar viyaththagu iraivakkinar vaazhththuvar vennaadai vaedhasaatchigal engumae niraindhidum thooya thiruchabai endrum nin maatchiyai velippaduththum 3. umadhunmai yega maganaana christhuvaiyum thaetridum thooya aaviyaiyum aaraadhikkinrom christhuve neerae maatchimikka vaendhan neerae thandhaiyin endrum vaazhum inaiyillaa maindhan manidhanai meetka kanniyin udharaththil karuvaaga neer thayangavillai maranaththin kodukkai venrae neer vinnarasai visuvaasigalukkuth thirandhuvitteer thandhaiyin maatchiyil iraivanin valappakkam veetriruppavar neerae engalaith theerppida varubavar neerena visuvasikkinrom 4. aagavae vilaiyilaak kurudhiyai kondu meetta um adiyaarkku arulburiyum mudiyaa maatchiyil punithargalodu endrumae ivargalai inaiththarulum aandavare um makkalaik kaaththu umadhudaimaiyai aaseervadhiyum 5. avargalai aatchisei thenrendrum perungulamaaga maenmaip paduththiyarulum ovvoru naalum ummaip pugazhginrom enrendrum umadhu pugazhaip paaduginrom 6. indru naangal paavaththai vittu vilagi vaazhath thunaiburiyum engal meedhu irakkamaayirum irakkamaayirum aandavare 7. aandavare um karunaiyin paarvai emmeedhu nilaikkattum yenenil ummaiyae nambinom ummaiyae nambinom aandavare endrumae kalanga maattom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.