இறைவா உன் திருமுன் ஒரு குழந்தைபோல்
தாவி மேவி வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து
என்னைக் காப்பாயோ (2)
1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா (2)
ஒரு குறையும் இன்றிக் காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே வாழ்ந்து நானும்
இனி என்ன கைமாறு செய்வேன் -2
2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவர் நீதானையா
மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானையா (2)
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒருநாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழைப்பேன் -2
iraiva un thirumun oru kuzhandhaibol
thaavi maevi varuginraen en nilai naan solginraen
un kuzhandhai naanallavaa ennai nokki odi vandhu
ennaik kaappaayo (2)
1. anbaith thaedum podhu en thandhai neeyallavaa
amudham naadum podhu en annai neeyallavaa (2)
oru kuraiyum indrik kaaththaai
nal anbai ootti valarththaai
unnai odhukkiyae vaazhndhu naanum
ini enna kaimaaru seivaen -2
2. mangum vaazhvai agatri oli tharubavar needhaanaiyaa
manadhil amaidhi ponga vazhi arulbavan needhaanaiyaa (2)
unnai endrum enni vaazhndhu
orunaalum piriyaamal valarndhu
undhan madiyilae thavazhndhu naanum
ini appaa thandhaai endru azhaippaen -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.