இறைவனின் திருக்குலமே வருக

iraivanin thirukkulamae varuga

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறைவனின் திருக்குலமே வருக அரச குருகுலமே வருக-2 கறையில்லா கருணையின் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடி மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து பணிவோம் அவர் பதமே 1. தாயின் கருவினில் தோன்றுமுன்பே தயவாய் நம்மைத் தெரிந்தார் தனிப்பெரும் கருணையில் நம் பெயர் எல்லாம் தம் கையில் பொறித்து வைத்தார் தாயாக நாளும் சேயாக நம்மை கண்போலக் காக்கின்றார் இந்நாளில் நாமும் ஒன்றாகக் கூடி பண்பாடி பணிந்திடுவோம் 2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம் வாழ்வும் வழியும் வலிமையுமானவர் அவரடி பணிந்திடுவோம் வற்றாத நதியாய் அருள்வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கு உரைத்திவோம்
iraivanin thirukkulamae varuga arasa kurugulamae varuga-2 karaiyillaa karunaiyin kanivudan kaakkum inaiyillaa iraivanin thiruvadi paadi magizhndhu pugazhndhu inaindhu viraindhu panivom avar padhamae 1. thaayin karuvinil thondrumunbae thayavaai nammaith therindhaar thanipperum karunaiyil nam peyar ellaam tham kaiyil poriththu vaiththaar thaayaaga naalum saeyaaga nammai kanbolak kaakkinraar innaalil naamum onraagak koodi panbaadi panindhiduvom 2. aranum kottaiyum kaedayamaanavar avar pugazh paadiduvom vaazhvum vazhiyum valimaiyumaanavar avaradi panindhiduvom vatraadha nadhiyaai arulvaari vazhangum palibeedam soozhndhiduvom arulodu naamum uravodu vaazhvom ulagorkku uraiththivom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.