இயேசுவே இத்தரணியெங்கும் உன்னைக்

yesuve iththaraniyengum unnaik

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசுவே இத்தரணியெங்கும் உன்னைக் காண்கின்றேன் காணும் காட்சியில் எல்லாம் உன் புன்னகை பார்க்கிறேன் (2) செடியில் மலரில் சிரிப்பது நீ விண்ணில் நிலவில் ஒளிர்வது நீ -2 காண கண்கள் வாய்த்தால் இங்கே எங்கும் நீ எதிலும் நீ 1. காலைநேரம் கீழைவானில் வந்தனம் காண்கின்றேன் மாலை ஆதவன் மறையும் வேளை வதனம் பார்க்கிறேன் (2) வானம் கருத்து மேகம் திரண்டு பொழிய உன்னன்பில் நனைகின்றேன் (2) வானம்பாடி கானம் பாட தென்றலில் உன்னை உணர்கிறேன் -2 2. அன்பர் உருவில் அருகே வந்து தொட்டு அணைக்கிறாய் அன்னை வடிவில் இன்னல் தீர்க்க என்றென்றும் விளிக்கிறாய் (2) நீதிக்காக நாளுமிங்கே வாழ்வோர் நெஞ்சில் உயிர்க்கிறாய் -2 பாதையில் அன்பு வார்த்தை கேட்டு அன்பரின் கண்களில் சிரிக்கிறாய் - 2
yesuve iththaraniyengum unnaik kaanginraen kaanum kaatchiyil ellaam un punnagai paarkkiraen (2) sediyil malaril sirippadhu nee vinnil nilavil olirvadhu nee -2 kaana kangal vaaiththaal ingae engum nee edhilum nee 1. kaalainaeram keezhaivaanil vandhanam kaanginraen maalai aadhavan maraiyum vaelai vadhanam paarkkiraen (2) vaanam karuththu maegam thirandu pozhiya unnanbil nanaiginraen (2) vaanambaadi kaanam paada thendralil unnai unargiraen -2 2. anbar uruvil aruge vandhu thottu anaikkiraai annai vadivil innal theerkka enrendrum vilikkiraai (2) needhikkaaga naalumingae vaazhvor nenjil uyirkkiraai -2 paadhaiyil anbu vaarththai kaettu anbarin kangalil sirikkiraai - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.