இனிய தேவன் எழுந்து

iniya devan ezhundhu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இனிய தேவன் எழுந்து வரும் நேரமிது இதயங்களைத் திறந்து அவரை வரவேற்போம் எளிய மாந்தர் மகிழ்ந்து வாழ உடன் வருகின்றாhர் எழுச்சி பொங்க இன்று அவரைப் பாடுவோம் அன்பு தேவனைப் புகழ்ந்து நாமும் பாடுவோம் அன்பு ஆண்டவரைப் போற்றி நாமும் பாடுவோம் (2) 1. இதயம் அன்பைத் தேடும்போது தெய்வம் நம்மில் வருகின்றார் தெய்வம் நம்மில் வருகின்றார் - 2 இணைந்து மாந்தர் வாழும்போது தேவன் மகிழ்ச்சி கொள்கிறார் தேவன் மகிழ்ச்சி கொள்கிறார் - 2 இதயம் அன்பைத் தேடும்போது தெய்வம் நம்மில் வருகின்றார் இணைந்து மாந்தர் வாழும்போது தேவன் மகிழ்ச்சி கொள்கிறார் அன்புப் பாதைதனில் ஆக்கம் பெருகின்றோம் உறவுத் தோழமையில் அர்த்தம் காண்கின்றோம் இயேசுவே தெய்வமே வாருமே இதய வேந்தனே அன்பு தேவனைப் ... ... 2. உழைக்கும் மக்கள் சிரிப்பினிலே தெய்வம் நமக்குத் தெரிகின்றார் தெய்வம் நமக்குத் தெரிகின்றார் - 2 நீதி நெறியில் அகிலம் வளர தேவன் இன்று எழுகின்றார் தேவன் இன்று எழுகின்றார் - 2 உழைக்கும் மக்கள் சிரிப்பினிலே தெய்வம் நமக்குத் தெரிகின்றார் நீதி நெறியில் அகிலம் வளர தேவன் இன்று எழுகின்றார் வாழ்வின் கருவறையில் ஒன்றி உருபெறுவோம் வளமை சேர்த்திடவே உம்மில் இணைந்திருப்போம் அன்பனே நண்பனே வாருமே புதுமை வேந்தனே அன்பு தேவனைப் ... ...
iniya devan ezhundhu varum naeramidhu idhayangalaith thirandhu avarai varavaerpom eliya maandhar magizhndhu vaazha udan varuginraahr ezhuchchi ponga indru avaraip paaduvom anbu devanaip pugazhndhu naamum paaduvom anbu aandavaraip potri naamum paaduvom (2) 1. idhayam anbaith thaedumbodhu deivam nammil varuginraar deivam nammil varuginraar - 2 inaindhu maandhar vaazhumbodhu devan magizhchchi kolgiraar devan magizhchchi kolgiraar - 2 idhayam anbaith thaedumbodhu deivam nammil varuginraar inaindhu maandhar vaazhumbodhu devan magizhchchi kolgiraar anbup paadhaidhanil aakkam peruginrom uravuth thozhamaiyil arththam kaanginrom yesuve deivame vaarumae idhaya vaendhane anbu devanaip ... ... 2. uzhaikkum makkal sirippinilae deivam namakkuth theriginraar deivam namakkuth theriginraar - 2 needhi neriyil agilam valara devan indru ezhuginraar devan indru ezhuginraar - 2 uzhaikkum makkal sirippinilae deivam namakkuth theriginraar needhi neriyil agilam valara devan indru ezhuginraar vaazhvin karuvaraiyil ondri uruberuvom valamai saerththidavae ummil inaindhiruppom anbane nanbane vaarumae pudhumai vaendhane anbu devanaip ... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.