இனிய அன்பு தேவனே என் இதயம் எழுந்து வாரும்
இனி எந்தன் வாழ்வு உமதே
1. துன்பங்கள் ஆயிரம் அலைகளாய் என்னிடம் வருகின்றன
அதில் துவண்டு நான் போயினும் உந்தன்
திருமுகம் காண்கின்றேன்
என்றும் நீ இருக்க எனக்கேன் குறையோ
உயர் இறைவன் அன்பு என்றும் போதுமே
துயர் யாவுமே என்றும் தீருமே
2. தீபம் போல் வாழ்வு உன்முன் என்றும் ஒளிரட்டும்
அதில் சுடர்போல் நானும் என்றும்
உன்னால் ஒளிரணும்
என்றும் நீ இருக்க குறையே இல்லையே
இந்த இறைவன் கருணை என்றும் போதுமே
எல்லை இன்றியே கடலாகுமே
iniya anbu devane en idhayam ezhundhu vaarum
ini endhan vaazhvu umadhae
1. thunbangal aayiram alaigalaai ennidam varugindrana
adhil thuvandu naan poyinum undhan
thirumugam kaanginraen
endrum nee irukka enakkaen kuraiyo
uyar iraivan anbu endrum podhumae
thuyar yaavumae endrum theerumae
2. theebam pol vaazhvu unmun endrum olirattum
adhil sudarbol naanum endrum
unnaal oliranum
endrum nee irukka kuraiyae illaiyae
indha iraivan karunai endrum podhumae
ellai indriyae kadalaagumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.