இதோ பெரிய குரு

idho periya kuru

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இதோ பெரிய குரு வருகின்றார் இறைவனுக்குகந்தவர் வருகின்றார் 1. இவர்க்கிணையாக இறைசொல்லை ஏற்று நடப்பவர் வேறில்லை எனவே அவர் தம் கோத்திரத்தில் இனிதே செழிப்புற ஆணையிட்டார் 2. எல்லாக் குலத்து மாந்தர்களின் ஆசீர் ஆண்டவர் அவர்க்களித்தார் அவரின் சிரசின் மேலே தம் உடன்படிக்கை தனை நிலைக்கச் செய்தார் 3. தம் திருக்கரத்தின் ஆசீரால் தற்பரன் இவரை ஏற்றுக் கொண்டார் மன்னவர் முன்னவர் புகழ் விளங்க மகிமையின் முடியை அவர்க்களித்தார் 4. குருத்துவப் பணியை நிறைவேற்றி குவலய மெங்கும் அவர் பெயரால் நறுமண பலியை செலுத்திடவே நல்கினார் பூரணக் குருத்துவமே
idho periya kuru varuginraar iraivanukkugandhavar varuginraar 1. ivarkkinaiyaaga iraisollai yetru nadappavar vaerillai enavae avar tham koththiraththil inidhae sezhippura aanaiyittaar 2. ellaak kulaththu maandhargalin aaseer aandavar avarkkaliththaar avarin sirasin maelae tham udanbadikkai thanai nilaikkach seidhaar 3. tham thirukkaraththin aaseeraal tharparan ivarai yetruk kondaar mannavar munnavar pugazh vilanga magimaiyin mudiyai avarkkaliththaar 4. kuruththuvap paniyai niraivaetri kuvalaya mengum avar peyaraal narumana paliyai seluththidavae nalginaar pooranak kuruththuvamae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.