இதய யாழில் சுரம்

idhaya yaazhil suram

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இதய யாழில் சுரம் இசைத்து புகழ்ந்து பாடுங்கள் - தேவன் இணையில்லாத செயலுக்காக நன்றி கூறுங்கள் 1. வாழ்வு முழுதும் வழியைக் காட்டி தோழனாகினார் - என் தாழ்வை நீக்கி ஏழ்மை போக்கி பக்தனாக்கினார் உருகும் மெழுகாய் என்னை மாற்றி தீபம் ஏற்றினார் உன் வேதம் சொல்ல பேதை என்னை கருவியாக்கினார் 2. மனிதர்களைப் புனிதராக்க மனிதனாகினார் - இந்த அடிமைகளும் உரிமைப் பெற குரல் கொடுக்கின்றார் இருள் சூழ்ந்த மனித வாழ்வில் ஒளியை ஏற்றினார் இந்த உலகம் எங்கும் பொதுமை வளர புதுமை செய்கின்றார்
idhaya yaazhil suram isaiththu pugazhndhu paadungal - devan inaiyillaadha seyalukkaaga nandri koorungal 1. vaazhvu muzhudhum vazhiyaik kaatti thozhanaaginaar - en thaazhvai neekki yezhmai pokki pakthanaakkinaar urugum mezhugaai ennai maatri theebam yetrinaar un vedham solla paedhai ennai karuviyaakkinaar 2. manidhargalaip punitharaakka manidhanaaginaar - indha adimaigalum urimaip pera kural kodukkinraar irul soozhndha manidha vaazhvil oliyai yetrinaar indha ulagam engum podhumai valara pudhumai seiginraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.