இசைதரும் நரம்பாய் வந்தேன் இதய தெய்வமே
இணைத்தென்னை மீட்டிடுவாய்
இறைவா இறைவா என் தலைவா
இணைத்தென்னை மீட்டிடுவாய்
1. கருவினில் தோன்றிடுமுன்னே என்னைத் தேர்ந்துகொண்டாய்
கரங்களில் என்னைப் பொறித்து என்றும் காத்து வந்தாய் (2)
என் பெயர் சொல்லி என்னை நீ அழைத்தாய்
பணிவிடை செய்திடவே (2)
மறவேன் மறவேன் உந்தன் பணியைத்
தொடர்வேன் தொடர்வேன் உந்தன் வழியை
2. வாழ்வு தரும் உந்தன் வார்த்தையை எங்கும் எடுத்துரைப்பேன்
வார்த்தையை வாழ்வாக்கி என்றும் வாழ்ந்திடுவேன் (2)
எளியோர் வாழ்ந்திட தாழ்ந்தோர் உயர்ந்திட
எந்நாளும் உழைத்திடுவேன் (2) - மறவேன் ... ... ...
isaidharum narambaai vandhaen idhaya deivame
inaiththennai meettiduvaai
iraiva iraiva en thalaivaa
inaiththennai meettiduvaai
1. karuvinil thondridumunne ennaith thaerndhugondaai
karangalil ennaip poriththu endrum kaaththu vandhaai (2)
en peyar solli ennai nee azhaiththaai
panividai seidhidavae (2)
maravaen maravaen undhan paniyaith
thodarvaen thodarvaen undhan vazhiyai
2. vaazhvu tharum undhan vaarththaiyai engum eduththuraippaen
vaarththaiyai vaazhvaakki endrum vaazhndhiduvaen (2)
eliyor vaazhndhida thaazhndhor uyarndhida
ennaalum uzhaiththiduvaen (2) - maravaen ... ... ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.