சின்னக்குழந்தை இது செல்லக்குழந்தை
மண்ணில் நம்மை தேடிவந்த தெய்வக்குழந்தை - (2)
ஆரிரோ ஆராரோ பாடுவோம் ஒன்று கூடியெ...(2)
விண்ணும் மண்ணும் மகிழ்ந்திட
நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்திட
நெஞ்சுக்குள்ளே பிறந்திடும் நாள் இதுவே - நம்
நெஞ்சுக்குள்ளே பிறந்திடும் நாள் இதுவே
1. புதுமை தேடுகின்ற புதுவரவு - புது
விடியலை தருகின்ற அருள் இரவு
நம்பிக்கை விதைத்திடும் புதுநிலவு - இன்
நானிலம் மகிழ்வுறும் நிறை உறவு
இதயமும் உதயம் காணுதே - இறை
அருள் மழை பொழியவே மகிழ்ந்திடுதே - (2)
2. அன்பைப் பாடுகின்ற ஆறமுது
இது அகிலத்தை நிறைக்கின்ற வான்அமுது
நம்பிக்கை சுடர்விடும் திருவிளக்கு
இது நம்பிடும் யாவரும் அருள்வாக்கு
இதயத்தில் பேரொளி சூழுது
இறை அருள்மணி ஒலித்திட மகிழ்ந்திடுதே - (2)
sinnakkuzhandhai idhu sellakkuzhandhai
mannil nammai thaedivandha theivakkuzhandhai - (2)
aariro aaraaro paaduvom ondru koodiye...(2)
vinnum mannum magizhndhida
nenjamellaam negizhndhida
nenjukkullae pirandhidum naal idhuvae - nam
nenjukkullae pirandhidum naal idhuvae
1. pudhumai thaedugindra pudhuvaravu - pudhu
vidiyalai tharugindra arul iravu
nambikkai vidhaiththidum pudhunilavu - in
naanilam magizhvurum nirai uravu
idhayamum udhayam kaanudhae - irai
arul mazhai pozhiyavae magizhndhidudhae - (2)
2. anbaip paadugindra aaramudhu
idhu agilaththai niraikkindra vaanamudhu
nambikkai sudarvidum thiruvilakku
idhu nambidum yaavarum arulvaakku
idhayaththil paeroli soozhudhu
irai arulmani oliththida magizhndhidudhae - (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.