வானுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்
பாலம் வைத்தானே
பூமியை இரட்சிக்க என்னையே
போக வைத்தானே
மண்ணில் வந்தேனே என்னைதந்தேனே
உயிர்க்ளும் நானே ஆகிறேன்
உங்களில் தானே வாழ்கிறேன்
1. தேகத்தில் அன்று சிந்திய குருதி பாவத்தை கழுவாதோ
பொன்னுடல் தாங்கிய சிலுவை எல்லாம் பூக்கள் மலராதோ
வானும் நானே மண்ணும் நானே
காற்றும் நானே ஊற்றும் நானே
தேவன் நான் தானே ஜீவன் நான் தானே
2. எங்கெங்கு யாத்திரை சென்றிடும் போதும்
என் அண்டை வாருங்கள்
அழுகின்ற மனதுக்கு ஆறுதல் தருவேன் பாரங்கள் தீருங்கள்
ஞானம் வாழ்க நன்மை சூழ்க
எங்கும் உயிர்கள் இன்பம் காண்க
அன்பு கொள்ளுங்கள் இன்ப வெள்ளங்கள்
vaanukkum mannukkum aandavar
paalam vaiththaane
boomiyai iratchikka ennaiyae
poga vaiththaane
mannil vandhaene ennaidhandhaene
uyirklum naane aagiraen
ungalil thaane vaazhgiraen
1. thaegaththil andru sindhiya kurudhi paavaththai kazhuvaadho
ponnudal thaangiya siluvai ellaam pookkal malaraadho
vaanum naane mannum naane
kaatrum naane ootrum naane
devan naan thaane jeevan naan thaane
2. engengu yaaththirai sendridum podhum
en andai vaarungal
azhugindra manadhukku aarudhal tharuvaen paarangal theerungal
gnaanam vaazhga nanmai soozhga
engum uyirgal inbam kaanga
anbu kollungal inba vellangal
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.