விண்ணில் வாழ் அன்னையைப்

vinnil vaazh annaiyaip

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

விண்ணில் வாழ் அன்னையைப் போற்றுவோம் மண்ணில் வாழ் மக்கள் ஒன்றாய் கூடி தன்னலமில்லாத தாயவள் மண்ணில் வாழ் மக்களைக் காப்பவள் இந்நிலத்தில் லூர்து நகரிலே நன்மைகள் புரிய எழுந்தவள் 1. மசபியேல் என்னும் குகையிலே மாபெரும் காட்சி தந்தவள் நாமே அமல உற்பவம் நாதன் யேசுவின் தாயென நங்கையாம் பெர்னதெத் கன்னியிடம் மென்கரம் விரித்து சிரித்தவள் 2. செபமும் தபமும் செய்யென்றாள் பாவங்களின் பரிகாரமாய் நித்திய வாழ்வை நாம் பெற பக்தியாய் செபிப்போம் பாரிலே உண்மை மறையினை மக்களெல்லாம் உணர நாளும் ஜெபம் செய்வோம்
vinnil vaazh annaiyaip potruvom mannil vaazh makkal onraai koodi thannalamillaadha thaayaval mannil vaazh makkalaik kaappaval innilaththil loordhu nagarilae nanmaigal puriya ezhundhaval 1. masabiyael ennum kugaiyilae maaberum kaatchi thandhaval naamae amala urpavam naadhan yaesuvin thaayena nangaiyaam pernadheth kanniyidam mengaram viriththu siriththaval 2. sebamum thabamum seiyenraal paavangalin parigaaramaai niththiya vaazhvai naam pera pakthiyaai sebippom paarilae unmai maraiyinai makkalellaam unara naalum jebam seivom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.