ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவப் பாதையிலே நடத்தும்
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் - 2
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர் 2
1. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயம் ஏற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள்மேல்
நேச ஆவி மாரி ஊற்றுவீர்
2. வாக்குத் தந்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாற உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கின்றோம்
வல்ல ஆவி மாறி ஊற்றுவீர்
3. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலாகுதே
மாய லோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரே
jeevanulla devane vaarum
jeevap paadhaiyilae nadaththum
jeevath thanneer oorum ootrilae
jeevan pera ennai nadaththum - 2
yesuve neer periyavar
yesuve neer parisuthar
yesuve neer nallavar
yesuve neer vallavar 2
1. aindhu kanda makkalukkaaga
aindhu kaayam yetra naesarae
nondhurugi vandha makkalmael
naesa aavi maari ootruveer
2. vaakkuth thandham seidha karththarae
vaakku maara unmai naadhane
vaakkai nambi vandhu nirkinrom
valla aavi maari ootruveer
3. niyaayath theerppin naal nerungudhae
naesar vara kaalaagudhae
maaya logam nambi maandidum
maanidarai meetka maatteerae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.