இயேசுவே என் இதயத்தில் நீ எழுந்து வந்தீரே
எந்தன் உள்ளம் மகிழ்ந்து நாளும்
நன்றி சொல்லி நாம் பாடுவோம்
1. பாடி மகிழ்ந்திடுவோம் தினம் போற்றி புகழ்ந்திடுவோம்
தேடி வந்த உம்மை வாழ்த்தி வணங்கிடுவோம்
உணவில் உருவில் அருளின் வடிவில் உள்ளத்தில் உறைபவரே
அருகிலே அமர்ந்து அன்பையே பொழிந்து ஆனந்தம் அளிப்பவரே
2. குழலுடன் யாழிசைத்து உம் புகழினைப் பாடுவோம்
குயிலதன் குரலெடுத்து உம் திருப்பெயர் போற்றிடுவோம்
தந்தையின் அன்பும் தாயின் அரணும் எனக்கெல்லாம் நீ தானய்யா
சிந்தை மகிழ்ந்து உம்மிலே என்றும் சங்கமம் ஆகிடுவோம்
yesuve en idhayaththil nee ezhundhu vandheerae
endhan ullam magizhndhu naalum
nandri solli naam paaduvom
1. paadi magizhndhiduvom thinam potri pugazhndhiduvom
thaedi vandha ummai vaazhththi vanangiduvom
unavil uruvil arulin vadivil ullaththil uraibavarae
arugilae amarndhu anbaiyae pozhindhu aanandham alippavarae
2. kuzhaludan yaazhisaiththu um pugazhinaip paaduvom
kuyiladhan kuraleduththu um thiruppeyar potriduvom
thandhaiyin anbum thaayin aranum enakkellaam nee thaanaiyaa
sindhai magizhndhu ummilae endrum sangamam aagiduvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.