அன்பைப் பொழியும் அருள் நாதனே
இருளை நீக்கும் நல்ஒளியானவா
உள்ளம் மகிழ உறவில் மலர - 2
நல்லாயன் இயேசுவே எனில் நாளும் வாருமே
1. வழியான தேவன் வாழ்வாக வந்தாய்
வளமோடு நான் வாழவே -2
உன் அருள் போதும் என் இருள் நீங்கும்
கனிவாக மகிழ்வாக (2) நான் மாற நீ வாருமே
நல்லாயன் இயேசுவே
2. உயிர் வாழ நாளும் உடல் மூட என்றும்
ஒருபோதும் கவலை வேண்டாம் -2
உம் வார்த்தை போதும் என் வாழ்வே மாறும்
ஒளியாக உப்பாக (2) நான் மாற நீ வாருமே
நல்லாயன் இயேசுவே
anbaip pozhiyum arul naadhane
irulai neekkum naloliyaanavaa
ullam magizha uravil malara - 2
nallaayan yesuve enil naalum vaarumae
1. vazhiyaana devan vaazhvaaga vandhaai
valamodu naan vaazhavae -2
un arul podhum en irul neengum
kanivaaga magizhvaaga (2) naan maara nee vaarumae
nallaayan yesuve
2. uyir vaazha naalum udal mooda endrum
orubodhum kavalai vaendaam -2
um vaarththai podhum en vaazhvae maarum
oliyaaga uppaaga (2) naan maara nee vaarumae
nallaayan yesuve
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.