எந்தன் இதயம் வந்த நேரம்

endhan idhayam vandha naeram

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எந்தன் இதயம் வந்த நேரம் இன்ப நேரமே நீயும் நானும் பேசும் மொழி தான் புனித கானமே மன்னவனே நீ மகிழும் காலம் எனது வாழ்விலே நான் திருந்தி உன்னைத் தழுவும் போது உதயமாகுதே 1. நடந்து செல்லும் பாதையில் தடைகள் வந்து சேர்கையில் உள்ளம் வருந்தி சோருதே உவகை என்னில் மறையுதே இடர்கள் நீக்கும் இறையே வா சுடராய் என்னில் எழுந்து வா ஓடம் போல சுமந்து என்னை அணைத்து கரைக்கு அழைத்து வா 2. அருவி போல பாய்ந்திடும் உந்தன் அன்பின் சுகமதை எளியோர் பணியில் காண்கிறேன் அவரில் உன்னைத் தொழுகிறேன் நன்மை ஒருநாள் வென்றிடும் உந்தன் அன்பைச் சொல்லிடும் ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் எந்தன் வாழ்வு மலர்ந்திடும் உம்மில்
endhan idhayam vandha naeram inba naeramae neeyum naanum paesum mozhi thaan punitha kaanamae mannavane nee magizhum kaalam enadhu vaazhvilae naan thirundhi unnaith thazhuvum podhu udhayamaagudhae 1. nadandhu sellum paadhaiyil thadaigal vandhu saergaiyil ullam varundhi sorudhae uvagai ennil maraiyudhae idargal neekkum iraiyae vaa sudaraai ennil ezhundhu vaa odam pola sumandhu ennai anaiththu karaikku azhaiththu vaa 2. aruvi pola paaindhidum undhan anbin sugamadhai eliyor paniyil kaangiraen avaril unnaith thozhugiraen nanmai orunaal vendridum undhan anbaich sollidum yetraththaazhvu maraindhu pogum endhan vaazhvu malarndhidum ummil
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.