இன்பத்தின் ஊற்றே வா
ஏழிசை மழையே வா
எரியும் சுடரே சுடரின் ஒளியே
ஒளியின் உயிரே வா
1. வசந்தம் மனதிற்கு இனிமை தரும்
வண்ணம் மலருக்குப் பொழிவு தரும்
வாழ்வில் உன்னை ஏற்கும் இதயம் -2
வசந்த மலர்களின் மணம் பரப்பும்
2. அப்பத்தின் வடிவில் உன்னை மறைத்தாய்
ஆன்ம தாகம் தணித்திடுவாய்
அழியா உணவின் இனிமை உண்டு
அருளால் உள்ளம் அமைதி பெற
inbaththin ootrae vaa
yezhisai mazhaiyae vaa
eriyum sudarae sudarin oliye
oliyin uyirae vaa
1. vasandham manadhirku inimai tharum
vannam malarukkup pozhivu tharum
vaazhvil unnai yerkum idhayam -2
vasandha malargalin manam parappum
2. appaththin vadivil unnai maraiththaai
aanma thaagam thaniththiduvaai
azhiyaa unavin inimai undu
arulaal ullam amaidhi pera
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.