இரக்கம் மிகுந்த கரத்திலே

irakkam migundha karaththilae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இரக்கம் மிகுந்த கரத்திலே என்னை முழுதும் அர்ப்பணமே வாழ்வது என்னில் நீயாக வாழ்க்கை எல்லாம் உமக்காக எல்லாம் தந்தேன் என்னைத் தந்தேன் 1. குயவன் கையில் களிமண்ணாய் கொடுத்தேன் என்னை உன்னிடத்தில் எடுத்து உமது விருப்பம் போல் வடிவம் கொடுத்து வனையுமே உனக்காய் வாழும் ஒரு கணம் அதுவே வாழ்வின் பேரின்பம் நீயில்லாத வேறிடம் அனைத்தும் இருந்தும் ஏதின்பம் என்னிறைவா அர்ப்பணமே என்னை முழுதும் ஆட்கொள்ளுமே 2. உமது அன்பு தீபமாய் எரிய என்னை எரித்திடும் உமது உண்மை நாதமாய் ஒலிக்கக் குரலை வளர்த்திடும் எனது சிறிய விளக்கிலே எரியும் தீபம் நீயன்றோ எனது சொல்லும் செயல்களும் உமது தீப ஒளியன்றோ என்னிறைவா எரித்திடும் உமது ஒளியைப் பரப்பிடும்
irakkam migundha karaththilae ennai muzhudhum arppanamae vaazhvadhu ennil neeyaaga vaazhkkai ellaam umakkaaga ellaam thandhaen ennaith thandhaen 1. kuyavan kaiyil kalimannaai koduththaen ennai unnidaththil eduththu umadhu viruppam pol vadivam koduththu vanaiyumae unakkaai vaazhum oru kanam adhuvae vaazhvin perinbam neeyillaadha vaeridam anaiththum irundhum yedhinbam enniraivaa arppanamae ennai muzhudhum aatkollumae 2. umadhu anbu theebamaai eriya ennai eriththidum umadhu unmai naadhamaai olikkak kuralai valarththidum enadhu siriya vilakkilae eriyum theebam neeyanro enadhu sollum seyalgalum umadhu theeba oliyanro enniraivaa eriththidum umadhu oliyaip parappidum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.