இறைமக்களே வருக வருக
குருகுலமே வருக வருக
மங்கள நன்னாளிது ஆண்டவர் படைத்த நாளிது
கூடிடுவோம் தொழுதிடுவோம்
ஆண்டவரில் அகமகிழ்வோம் -2
இறைமக்களே வருக குருகுலமே வருக -2
1. இறைவனின் பிள்ளைகள் நாம்
கிறிஸ்துவில் ஒரினம் நாம்
ஆவியின் புதுப்படைப்பாய்
அன்பினில் வாழ்ந்திடுவோம்
பிளவுகளும் பிரிவுகளும் நம்மில் மறைந்திட
உறவுகளும் பரிவுகளும் நம்மில் வளர்ந்திட
நிறை வாழ்வில் வழிச் செல்ல
அருள் வாழ்வில் துணை தொடர - 2
2. ஆலயம் நுழைந்திடவே
ஆனந்தம் பொங்கிடுதே
அவர் பதம் அமர்ந்திடவே
அமைதியும் சீண்டிடுதே
தீமைகளை களைகளென களைந்து எறிந்திட
நன்மைகளை நல்மணிகளென நம்மில் விதைத்திட
ஆவியிலும் உண்மையிலும்
இறைவனையே தொழுதிடவே - 2
iraimakkale varuga varuga
kurugulamae varuga varuga
mangala nannaalidhu aandavar padaiththa naalidhu
koodiduvom thozhudhiduvom
aandavaril agamagizhvom -2
iraimakkale varuga kurugulamae varuga -2
1. iraivanin pillaigal naam
christhuvil orinam naam
aaviyin pudhuppadaippaai
anbinil vaazhndhiduvom
pilavugalum pirivugalum nammil maraindhida
uravugalum parivugalum nammil valarndhida
nirai vaazhvil vazhich sella
arul vaazhvil thunai thodara - 2
2. aalayam nuzhaindhidavae
aanandham pongidudhae
avar padham amarndhidavae
amaidhiyum seendidudhae
theemaigalai kalaigalena kalaindhu erindhida
nanmaigalai nalmanigalena nammil vidhaiththida
aaviyilum unmaiyilum
iraivanaiyae thozhudhidavae - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.