என் இறைவா என் அரசே உன்னிடமே
சரணடைந்தேன் இன்று உன் திருப்பீடம்
ஓடிவந்தேன் - என் இறைவா
1. உன் புகழைப் பாடிடவே - உனை
நினைந்து உருகி நின்றேன்
பலியினில் பரமனை வாழ்த்திடவே
பாசத்தால் இறை உன்னைப் போற்றவந்தேன்
அருளே என் இறைவா
உயிரே என் தலைவா
அகிலமே ஆண்டிடும் அருட் பெருக்கே
அன்பினுக்கரசே ஒளி விளக்கே என் இறைவா
2. கார்முகிலைக் கண்டு மனம்
களிகூரும் மயிலெனவே
உன் முகம் காணவே ஆவல் கொண்டு உன்
அடி பணிந்து வாழ வந்தேன்
அருளே என் இறைவா
அமுதே என் தலைவா
எளியோருக்கு இரங்கிடும் என் இறைவா
ஏழை என் குரலையும் கேட்டிடுவாய் என் இறைவா
en iraiva en arasae unnidamae
saranadaindhaen indru un thiruppeedam
odivandhaen - en iraiva
1. un pugazhaip paadidavae - unai
ninaindhu urugi ninraen
paliyinil paramanai vaazhththidavae
paasaththaal irai unnaip potravandhaen
arule en iraiva
uyirae en thalaivaa
agilamae aandidum arut perukkae
anbinukkarasae oli vilakkae en iraiva
2. kaarmugilaik kandu manam
kaligoorum mayilenavae
un mugam kaanavae aaval kondu un
adi panindhu vaazha vandhaen
arule en iraiva
amudhae en thalaivaa
eliyorukku irangidum en iraiva
yezhai en kuralaiyum kaettiduvaai en iraiva
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.