ஒரு காற்றாய் இளங்காற்றாய்
உன் ஆலயம் தேடி வந்தேன்
சிறு நதியாய் புது மலராய்
உன் சந்நிதி நாடி வந்தேன்
என்னையே விளக்காக ஏற்றவே வந்தேன்
என்னையே எண்ணையாய் ஊற்றவே வந்தேன்
1. ஆன்ம நூலில் இதயப்பூவை
மாலையாக்கி தொடுக்க வந்தேன் - (2)
ஆண்டவரின் அடிமையென்று
உனக்கு என்னை கொடுக்க வந்தேன் - (2)
உந்தன் தரிசனம் கிடைக்கவே
பல வருஷங்கள் தவித்தேனே
உந்தன் குரல் என்னை அழைக்கவே
சிறு குழந்தையாய் துடித்தேனே
2. வைர விளக்காம் விண்மீனால்
வானம் உனக்கு தீபம் ஏற்றும் - (2)
சொட்டு சொட்டாய் கடல் பிழிந்து
மேகம் உனக்கு தீர்த்தம் ஊற்றும் -(2)
இந்த இயற்கையின் அழகுகள்
பல வியப்புகள் கொடுக்குதே
என்னை உனக்கெனக் கொடுத்திட
உந்தன் படைப்புகள் அழைக்குதே - (2)
oru kaatraai ilangaatraai
un aalayam thaedi vandhaen
siru nadhiyaai pudhu malaraai
un sannidhi naadi vandhaen
ennaiyae vilakkaaga yetravae vandhaen
ennaiyae ennaiyaai ootravae vandhaen
1. aanma noolil idhayappoovai
maalaiyaakki thodukka vandhaen - (2)
aandavarin adimaiyendru
unakku ennai kodukka vandhaen - (2)
undhan tharisanam kidaikkavae
pala varushangal thaviththaene
undhan kural ennai azhaikkavae
siru kuzhandhaiyaai thudiththaene
2. vaira vilakkaam vinmeenaal
vaanam unakku theebam yetrum - (2)
sottu sottaai kadal pizhindhu
maegam unakku theerththam ootrum -(2)
indha iyarkaiyin azhagugal
pala viyappugal kodukkudhae
ennai unakkenak koduththida
undhan padaippugal azhaikkudhae - (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.