இறைவனின் ஆலயத்தில் இன்னிசை கீதங்களால்
இறைபுகழ் பாடிடுவோம் நாம் திருப்பலி செலுத்திடுவோம்
1. பலியிலெல்லாம் உயர்ந்த பலி இயேசுவின் தியாகப்பலி
படைத்தவரே படைப்பிற்காக தன்னுயிர் தந்த பலி - (2)
திருப்பலியின் திருவருளை தினந்தினம் பெற்றிடவே
மனத்தில் மாசினை களைந்து மன்னனை பாடிடுவோம்.
2. சுமைசுமந்து சோர்ந்திருந்தால் தோள் கொடுத்து காப்பவர்
சொந்தங்களை இழந்திருந்தால் சோதரனாய் வாழ்பவர் - (2)
பாவத்தினால் வாடி நின்றால் பாசத்தால் மன்னிப்பவர்
விந்தையால் வாழ்ந்திடும் இறைவன் வேதனை தீர்த்திடுவார்
iraivanin aalayaththil innisai keedhangalaal
iraibugazh paadiduvom naam thiruppali seluththiduvom
1. paliyilellaam uyarndha pali yesuvin thiyaagappali
padaiththavarae padaippirkaaga thannuyir thandha pali - (2)
thiruppaliyin thiruvarulai thinandhinam petridavae
manaththil maasinai kalaindhu mannanai paadiduvom.
2. sumaisumandhu sorndhirundhaal thol koduththu kaappavar
sondhangalai izhandhirundhaal sodharanaai vaazhbavar - (2)
paavaththinaal vaadi ninraal paasaththaal mannippavar
vindhaiyaal vaazhndhidum iraivan vaedhanai theerththiduvaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.