வைகறை வானமே மேகப்பூக்களால்

vaigarai vaanamae maegappookkalaal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வைகறை வானமே மேகப்பூக்களால் விடியல் கோலம் போடு மரண இருள்வென்று வெளிச்சவெள்ளமாய் இயேசு உயிர்த்தார் இன்று ஏற்றத்தாழ்வுகள் இனியும் இல்லையே விடுதலை கீதங்கள் புவி எங்கும் முழங்கும் 1. வான்மழை இங்கு வந்து வாழும் முறை சொல்லி தந்து மண்ணுக்கென தன்னைத் தந்ததே தான் என்னும் எண்ணம் நீக்கி நாம் என்னும் கொள்கை கொண்டால் மண்ணில் நாளும் மாற்றம் தோன்றுமே நீதி நிலைத்திடும் பூமி நிமிர்ந்திடும் வானம் வசப்படும் வாழ்வு வளப்படும் பேதங்கள் இல்லாத வேதங்கள் வாழ்வாக சோகங்கள் சூழ்கின்ற மேகங்கள் இனிமாற பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே 2. பஞ்சம் பிணி இல்லை என்னும் யுத்தம் இல்லா பூமி வேண்டும் இறைவன் ஆட்சி அன்று உயிர்க்கும் வஞ்சம் பேசும் நெஞ்சம் எல்லாம் வாழ்க்கைக்கினி ஆகாதென்று தத்துவங்கள் எங்கும் முளைக்கும் நன்மை நிறைந்திடும் தீமை தகர்ந்திடும் பொய்மை விலகிடும் வாய்மை நிலைத்திடும் இல்லாமை இல்லாத பூலோகம் உருவாக எல்லோரும் நல்லாகும் பூபாளம் இசைபாட பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே
vaigarai vaanamae maegappookkalaal vidiyal kolam podu marana irulvendru velichchavellamaai yesu uyirththaar indru yetraththaazhvugal iniyum illaiyae vidudhalai keedhangal puvi engum muzhangum 1. vaanmazhai ingu vandhu vaazhum murai solli thandhu mannukkena thannaith thandhadhae thaan ennum ennam neekki naam ennum kolgai kondaal mannil naalum maatram thondrumae needhi nilaiththidum boomi nimirndhidum vaanam vasappadum vaazhvu valappadum paedhangal illaadha vaedhangal vaazhvaaga sogangal soozhgindra maegangal inimaara boomikku vedham sonna thirunaal idhudhaane 2. panjam pini illai ennum yuththam illaa boomi vaendum iraivan aatchi andru uyirkkum vanjam paesum nenjam ellaam vaazhkkaikkini aagaadhendru thaththuvangal engum mulaikkum nanmai niraindhidum theemai thagarndhidum poimai vilagidum vaaimai nilaiththidum illaamai illaadha poologam uruvaaga ellorum nallaagum poobaalam isaibaada boomikku vedham sonna thirunaal idhudhaane
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.