வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
1. பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்
2. திருமணப் பந்தியில் கனி இரசமே
அன்று அருளிய திருமகனே (2)
குருதி சிந்தி கடற்காடியினை
இன்று பருகிடக் கண்டதினால்
3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே (2)
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்
viyaagula maamariye thiyaagaththin maadhave
siluvai adiyinilae sindhai nondhazhudhaayo (2)
1. panniru vayadhil aalayaththil
andru arinjargal pugazhndhavarai (2)
karangalai viriththae kalvanaip pol
kazhumaraththinil kandadhinaal
2. thirumanap pandhiyil kani irasamae
andru aruliya thirumagane (2)
kurudhi sindhi kadarkaadiyinai
indru parugidak kandadhinaal
3. kanneerae sindhiya manidharukku
arul panniya thirumagane (2)
mannavarkkaagath thannuyirai
indru maaiththidak kandadhinaal
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.