விண்வாழும் தந்தாய் எந்நாளும்

vinvaazhum thandhaai ennaalum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

விண்வாழும் தந்தாய் எந்நாளும் உம்தம் பொன்நாமம் வாழ்க புவிபோற்ற வாழ்க (2) இருளெல்லாம் விலக அருளாட்சி வருக -2 மருள் நீக்கி எம்மை மகிழ்விக்க வருக 1. திறம்பாது உம்தம் திருவுள்ளம் விண்ணில் நிறைவேறல் போல நிலமீதும் வேண்டும் (2) அறங்காத்து என்றும் அருளோடு வாழ -2 உரஞ்சேர்க்கும் உணவை உவப்போடு தாரும் 2. இன்னாது செய்து இகழ்தோரை நாங்கள் எண்ணாது அன்றே மன்னித்தல் போல (2) எண்ணேதும் இல்லா எம்பாவம் தம்மை -2 அன்போடு மன்னித்து அருள்செய்ய வேண்டும் 3. நலியாத வலியார் சோதனைகள் வெல்ல புவிமீது தீமை அணுகாது வாழ (2) எமையாளும் வேந்தே இணையில்லா தந்தாய் உமை நாங்கள் வேண்டி ஒன்றாகத் தொழுதோம் ஒன்றாகத் தொழுதோம் - 2
vinvaazhum thandhaai ennaalum umdham ponnaamam vaazhga puvibotra vaazhga (2) irulellaam vilaga arulaatchi varuga -2 marul neekki emmai magizhvikka varuga 1. thirambaadhu umdham thiruvullam vinnil niraivaeral pola nilameedhum vaendum (2) arangaaththu endrum arulodu vaazha -2 uranjaerkkum unavai uvappodu thaarum 2. innaadhu seidhu igazhdhorai naangal ennaadhu anrae manniththal pola (2) ennaedhum illaa empaavam thammai -2 anbodu manniththu arulseiya vaendum 3. naliyaadha valiyaar sodhanaigal vella puvimeedhu theemai anugaadhu vaazha (2) emaiyaalum vaendhae inaiyillaa thandhaai umai naangal vaendi onraagath thozhudhom onraagath thozhudhom - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.