விண்ணகத் தந்தையின் விண்ணக

vinnagath thandhaiyin vinnaga

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

விண்ணகத் தந்தையின் விண்ணக கொடையாய் விளங்கும் தூய ஆவியே எங்கள் எண்ணமும் செயலும் உயர் அரும் கொடைகள் ஏழுடன் எம்முள் எழுந்தருள்வீர் 1. அன்றொரு நாளில் அனற்பிழம்பாக அப்போஸ்தலமே எழுந்தது போல இன்று எம் நெஞ்சில் வந்தருள்வீரே இணையில்லா துணையைத் தந்தருள்வீர் 2. பயமுடன் சோர்வும் பிணியும் நீங்க பனிபோல் அருளை பரிவுடன் பொழிவீர் அயலவர்க்காக பணி பல ஆற்ற ஆர்வமும் துணிவும் நல்கிடுவீர்
vinnagath thandhaiyin vinnaga kodaiyaai vilangum thooya aaviye engal ennamum seyalum uyar arum kodaigal yezhudan emmul ezhundharulveer 1. anroru naalil anarpizhambaaga apposthalamae ezhundhadhu pola indru em nenjil vandharulveerae inaiyillaa thunaiyaith thandharulveer 2. payamudan sorvum piniyum neenga panibol arulai parivudan pozhiveer ayalavarkkaaga pani pala aatra aarvamum thunivum nalgiduveer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.