வாருங்கள் ஆண்டவர் புகழ்தனைப்

vaarungal aandavar pugazhdhanaip

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வாருங்கள் ஆண்டவர் புகழ்தனைப் பாடுங்கள் மீட்பின் பாறை அவர் ஆர்ப்பரித்துப் போற்றுங்கள் நன்றிகள் செலுத்துங்கள் திருமுன் வாருங்கள் பாக்களால் பாராட்டிப் பாடுங்கள் கூக்குரல் இடுங்கள் ஏனெனில் அவர் மாண்புமிகுந்தவர் தெய்வங்களின் அரசர் 1. பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர் கையிலே உள்ளன மலைகளின் கொடுமுடிகள் உரிமையிலே கொண்டவர் கடல்தனை படைத்தது அவர் தானே தரை உருவானது அவராலே பணிவோம் தொழுவோம் வாருங்கள் முழந்தாளிடுவோம் வாருங்கள் 2. ஆயனவர் பேணிக்காக்கும் மேய்ச்சலின் ஆடுகள் நாம் நாம் அவர்க்கு செவிசாய்த்தால் எத்துணை நலமாகும் மெரிபாவில் மாசாவில் செய்தது போல் சோதிக்க வேண்டாம் ஆண்டவரை பணிவோம் தொழுவோம் வாருங்கள் முழந்தாளிடுவோம் வாருங்கள்
vaarungal aandavar pugazhdhanaip paadungal meetpin paarai avar aarppariththup potrungal nandrigal seluththungal thirumun vaarungal paakkalaal paaraattip paadungal kookkural idungal yenenil avar maanbumigundhavar theivangalin arasar 1. poovulagin aazhbagudhigal avar kaiyilae ullana malaigalin kodumudigal urimaiyilae kondavar kadaldhanai padaiththadhu avar thaane tharai uruvaanadhu avaraalae panivom thozhuvom vaarungal muzhandhaaliduvom vaarungal 2. aayanavar paenikkaakkum maeichchalin aadugal naam naam avarkku sevisaaiththaal eththunai nalamaagum meripaavil maasaavil seidhadhu pol sodhikka vaendaam aandavarai panivom thozhuvom vaarungal muzhandhaaliduvom vaarungal
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.