மூவொரு இறைவன் அன்பு உறவு
பூவினில் நமது குடும்ப வாழ்வு
ஆதி முதலே நன்றெனக் கண்டு
ஆண்டவர் தாமே அமைத்த படைப்பு
அன்பின் ஆலயம் குடும்பம் உறவின் சங்கமம் குடும்பம்
வளமிகு ஆன்மீகம் குடும்பம் பேரின்ப ஆரம்பம் குடும்பம்
1. ஆணும் பெண்ணுமாய் மனிதரைப் படைத்தார்
அன்பு உறவை அவர்களில் விதைத்தார்
குடும்ப வாழ்வைத் தொடக்கியே வைத்தார்
குழுமம் எனவே வளர்ந்திடப் பணித்தார்
2. கிறிஸ்து இயேசு போல மணமகன் வாழ
திருச்சபை எனவே மணமகள் ஒளிர
திருமணம் என்னும் அருட்சாதனத்தில்
இருமனம் இணையும் இல்லறம் வாழ்க
moovoru iraivan anbu uravu
poovinil namadhu kudumba vaazhvu
aadhi mudhalae nanrenak kandu
aandavar thaamae amaiththa padaippu
anbin aalayam kudumbam uravin sangamam kudumbam
valamigu aanmeegam kudumbam paerinba aarambam kudumbam
1. aanum pennumaai manidharaip padaiththaar
anbu uravai avargalil vidhaiththaar
kudumba vaazhvaith thodakkiyae vaiththaar
kuzhumam enavae valarndhidap paniththaar
2. christhu yesu pola manamagan vaazha
thiruchabai enavae manamagal olira
thirumanam ennum arutchaadhanaththil
irumanam inaiyum illaram vaazhga
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.