மரியே உன்னைப் போற்றுகின்றோம்
மாதவமே உன்னை வாழ்த்துகின்றோம் (2)
இறையே உன்னை ஏத்துகின்றோம்
அருள் வடிவே நன்றி கூறுகின்றோம் (2)
1. கிறிஸ்துவின் போதனை செயல்களையே
மனதினில் எந்நாளும் தியானம் செய்தாய் (2)
இயேசுவை முழுமையாய்ப் புரிந்துகொண்டு
உத்தமச் சீடராய் விளங்கி நின்றாய் (2)
2. இயேசுவின் புரட்சி செயல்களிலே
இறைவனைப் புகழ்ந்து பாடிநின்றாய் (2)
துன்பங்கள் இயேசுவைச் சூழ்கையிலே
உணர்வால் அவருடன் ஒன்றுபட்டாய் (2)
mariye unnaip potruginrom
maadhavamae unnai vaazhththuginrom (2)
iraiyae unnai yeththuginrom
arul vadivae nandri kooruginrom (2)
1. christhuvin podhanai seyalgalaiyae
manadhinil ennaalum thiyaanam seidhaai (2)
yesuvai muzhumaiyaaip purindhugondu
uththamach seedaraai vilangi ninraai (2)
2. yesuvin puratchi seyalgalilae
iraivanaip pugazhndhu paadininraai (2)
thunbangal yesuvaich soozhgaiyilae
unarvaal avarudan ondrubattaai (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.