அர்ச்சனை மலராக ஆலயத்தில்

archchanai malaraaga aalayaththil

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2) அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2) 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர் பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர் 2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர் உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர் உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர் அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர் கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர் அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்
archchanai malaraaga aalayaththil varuginrom aanandhamaai pugazh keedham endrum paaduvom (2) arppaniththu vaazhndhida anbar ummil valarndhida aasaiyodu arul vaendip paniginrom (2) 1. thaayin karuvilae uruvaagum munnarae arindhu engalaith thaerndha deivame paaviyaayinum pachchap pillaiyaayinum archchiththirukkinreer karpiththirukkinreer manidharaagap punitharaaga vaazhap panikkinreer pirarum vaazha engal vaazhvaik kodukka azhaikkinreer anjaadhae endru emmaik kaaththu varuginreer 2. umadhu vaarththaiyai engal vaayil oottineer umadhu paadhaiyai engal paadhaiyaakkineer umadhu maatchiyai emmil thulangach seiginreer umadhu saatchiyaai naangal vilangach solginreer azhiththu ozhikkak kavizhththu veezhththath thittam theettineer katti ezhuppa nattu vaikka emmai anuppineer anjaadhae endru emmaik kaaththu varuginreer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.