பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்
அகம் வந்து என்னை அருள் செய்ய வாராய்
மருள்நிறை வாழ்வில் நான் வாடும் போது
இருள் போக்க இறையே நீ எழுவாயே
1. உள்ளத்தின் ஏக்கங்கள் நிதம் வாட்டுதே
உன்னன்புத் தொடுதல்கள் எனைத் தேற்றுதே
உதிர்த்திடும் கண்ணீர் உன் முன்னே மலராய்
உருமாறி ஒன்றாய் கரம் கோர்த்து நிற்கும்
உவப்புடன் உன்னை அணி செய்து மகிழும்
2. கன்னல் போல் உன்னை நான் சுவைத்திடுவேன்
கார்மேக மழையுன்னில் நனைந்திடுவேன்
கனிவுறு வார்த்தைகள் உதிர்த்திடும் போது
கறை நீங்கி என் வாழ்வும் கனிவாக ஒளிரும்
கதிரான உன்னைக் கனவாகக் காணும்
panbaadi naalum padham thaedivandhaen
agam vandhu ennai arul seiya vaaraai
marulnirai vaazhvil naan vaadum podhu
irul pokka iraiyae nee ezhuvaayae
1. ullaththin yekkangal nidham vaattudhae
unnanbuth thodudhalgal enaith thaetrudhae
udhirththidum kanneer un munne malaraai
urumaari onraai karam korththu nirkum
uvappudan unnai ani seidhu magizhum
2. kannal pol unnai naan suvaiththiduvaen
kaarmaega mazhaiyunnil nanaindhiduvaen
kanivuru vaarththaigal udhirththidum podhu
karai neengi en vaazhvum kanivaaga olirum
kadhiraana unnaik kanavaagak kaanum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.