நெஞ்சில் சுரக்கும் நன்றி

nenjil surakkum nandri

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நெஞ்சில் சுரக்கும் நன்றி சுரங்கள் நானிலமெங்கும் நான் பாட நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண்போல விண்ணில் முளைத்திடும் மின்மினியாய் நெஞ்சில் முளைத்திடும் நல்விதைகள் மின்னித் தெறித்திடும் மின்னல்களாய் கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன் 1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க (2) நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் விதைத்தது கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது (2) அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் எல்லாமே நீர் தந்தது - 2 2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய் எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் (2) ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது இறையரசின் நினைவுகளும் யார் தந்தது (2) புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் எல்லாமே நீர் தந்தது - 2
nenjil surakkum nandri surangal naanilamengum naan paada nandhavanaththil undu kalikkum vandugal paadum panbola vinnil mulaiththidum minminiyaai nenjil mulaiththidum nalvidhaigal minnith theriththidum minnalgalaai kannil therindhidum nambikkaigal nanmaiyaik kandaen nallennam kondaen naanilamengum un pugazh solvaen 1. thol azhuththum nugaththadiyin vilangugalai udaikka thozhamaiyil boomiyilae pudhu ulagam padaikka (2) nenjukkullae puratchik kanalai yaar vidhaiththadhu kannukkullae nerupputh thanalai yaar vaiththadhu (2) anjaadha nenjamum anaiyaadha ennamum ellaamae neer thandhadhu - 2 2. ellaiyillaa ulaginilae enakku uyir thandhaai eththanaiyo manidhargalai uravenavae thandhaai (2) eeramulla uravugalai yaar thandhadhu iraiyarasin ninaivugalum yaar thandhadhu (2) pudhuyugaththin kanavugal punnagaikkum uravugal ellaamae neer thandhadhu - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.