நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா நித்தம் அது உனதாகுமே
நேசம் உன்னில் நான் காண்பதால்
உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்கும்
1. உன்னைக் காணாமலே உடன்
பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ
எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே
நான் கலங்கிடுவேன் ஆ
நீயில்லாமல் உயிர் வாடுதே எந்தன்
உணர்வோடு போராடுதே
உயிராக வா உறவாக வா
அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா
2. என் கோவில் தெய்வம் அது நீயானதால்
உன்னை வணங்கிடுவேன் ஆ
உயிர் ஆதாரமே என்னில் நீயானதால்
உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ
நீயில்லாமல் நானில்லையே - உந்தன்
நினைவின்றி வாழ்வில்லையே
நிழலாக வா நீங்காமல் வா
அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா
nenjil oru sangeedhamae iraiva niththam adhu unadhaagumae
naesam unnil naan kaanbadhaal
unnodu uravaada en jeevan yengum
1. unnaik kaanaamalae udan
paesaamalae naan thaviththiduvaen aa
endhan nilaimaariyae vazhi thadumaariyae
naan kalangiduvaen aa
neeyillaamal uyir vaadudhae endhan
unarvodu poraadudhae
uyiraaga vaa uravaaga vaa
azhaiththaen azhudhaen uyirae nee vaa vaa
2. en kovil deivam adhu neeyaanadhaal
unnai vanangiduvaen aa
uyir aadhaaramae ennil neeyaanadhaal
unnil magizhndhiduvaen aa
neeyillaamal naanillaiyae - undhan
ninaivindri vaazhvillaiyae
nizhalaaga vaa neengaamal vaa
azhaiththaen azhudhaen anbe nee vaa vaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.