நீயின்றி நானில்லை இறைவா
இறைவா இறைவா இறைவா வருவாய்
வருவாய் வருவாய் வருவாய் அருள்வாய்
நீயின்றி நானில்லை இறைவா - உன்
உறவின்றி உயிரில்லை தலைவா (2)
உன் புகழ்ப் பாடி உன்னருள் வேண்டி
எந்நாளும் நான் வாழுவேன்
1. கல்வாரி செந்நீரை எனக்கெனச் சிந்தி
அன்புக்கு இலக்கணம் காட்டி நின்றாய் (2)
பணிவென்றால் எதுவென்று பாதத்தைக் கழுவி -2
பணிவுக்கு புதுப் பொருள் தந்துவிட்டாய்
போகின்ற பாதை இருளாகிப் போனால் - என்
பாதைக்கு நீயே ஒளியாவாய்
2. கண்ணீரில் வாழ்ந்த எளியவர் பலரை
நெஞ்சோடு அணைத்து உயிர் கொடுத்தாய் (2)
நோயுற்று நொந்த உள்ளங்கள் தேடி -2
குணம் தந்து காத்து அருள் புரிந்தாய்
உறவெல்லாம் என்னை உதறிப் போனாலும்
உறவாய் உயிராய் இருந்திடுவாய்
neeyindri naanillai iraiva
iraiva iraiva iraiva varuvaai
varuvaai varuvaai varuvaai arulvaai
neeyindri naanillai iraiva - un
uravindri uyirillai thalaivaa (2)
un pugazhp paadi unnarul vaendi
ennaalum naan vaazhuvaen
1. kalvaari senneerai enakkenach sindhi
anbukku ilakkanam kaatti ninraai (2)
panivenraal edhuvendru paadhaththaik kazhuvi -2
panivukku pudhup porul thandhuvittaai
pogindra paadhai irulaagip ponaal - en
paadhaikku neeyae oliyaavaai
2. kanneeril vaazhndha eliyavar palarai
nenjodu anaiththu uyir koduththaai (2)
noyutru nondha ullangal thaedi -2
kunam thandhu kaaththu arul purindhaai
uravellaam ennai udharip ponaalum
uravaai uyiraai irundhiduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.