தேவப்பிதா என்றன் மேய்ப்பனல்லோ

thaevappitha endran maeippanallo

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தேவப்பிதா என்றன் மேய்ப்பனல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் என்னை பைம்புன் மேல் அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமந் தன்னை குளிரப் பண்ணி அடியேன் கால்களை நீதியென்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளைதடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்தி சுக தைலம் கொண்டென் தலையை சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன் வீட்டினில் சிறப்போடே நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்
thaevappitha endran maeippanallo sirumai thaazhchchi adaigilaene aavaladhaai ennai paimbun mael avar maeiththamar neer aruluginraar 1. aaththuman thannai kulirap panni adiyaen kaalgalai needhiyennum naerththiyaam paadhaiyil avar nimiththam nidhamum sugamaai nadaththuginraar 2. saa nizhal pallath thirangidinum satrum theengu kandanjaene vaanabaran ennodiruppaar valaidhadiyum kolumae thaetrum 3. pagaivark kedhirae oru pandhi paangaai enakken raerpaduththi suga thailam konden thalaiyai subamaai abishegam seiguvaar 4. aayul muzhuvadhum en paathram arulum nalamumaai nirambum naeyan veettinil sirappodae nedunaal kudiyaai nilaiththiruppaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.