தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம் என் நெஞ்சில் கண்டேனே
உன்னோடு நான் கண்ட சொந்தங்கள் எந்நாளும் வாழ்க
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போகும் இந்த நாட்கள் இனிதானவை
காணுதே என் மனம்
1. வாராது வந்த வாழ்வினில் நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வாழ நீயுமே சொன்ன யாவும் ஞாபகம்
ஒரு வழியில் ஆசைகள் மனிதத் துயர் ஓசைகள்
இன்பங்களாய் என் உலகமும்
எழுவதை நான் காண வேண்டும்
2. நெஞ்சோடு செய்த வேள்வியில் நான் காணும் கேள்விகள்
அஞ்சாது அன்று நீயுமே சென்ற பாதையின் தெளிவுகள்
அறநெறியில் ஆட்சியும் அன்புவழி வாழ்க்கையும்
ஓ தேவனே என் உலகினில்
எழுவதை நான் காண வேண்டும்
thaayin karuvil ennai anbu devan arindhirundhaar
vaazhvil uravu thandhu endha naalum valarththu vandhaar
ennenna aanandham en nenjil kandaene
unnodu naan kanda sondhangal ennaalum vaazhga
andha devan thandha vaazhkkai azhagaanadhu
vandhu pogum indha naatkal inidhaanavai
kaanudhae en manam
1. vaaraadhu vandha vaazhvinil naan kaanum vaalibam
vaazhvaangu vaazha neeyumae sonna yaavum njaabagam
oru vazhiyil aasaigal manidhath thuyar osaigal
inbangalaai en ulagamum
ezhuvadhai naan kaana vaendum
2. nenjodu seidha vaelviyil naan kaanum kaelvigal
anjaadhu andru neeyumae sendra paadhaiyin thelivugal
araneriyil aatchiyum anbuvazhi vaazhkkaiyum
o devane en ulaginil
ezhuvadhai naan kaana vaendum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.