தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் (2)
1. வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா (2) - வெறும்
விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் அல்லா நிலை இறைவா
2. உனக்கென என்னை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் (2) - எங்கள்
மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்
மனத்துயர் நீங்க படைக்கின்றோம்
thandhitta porutkal yaavaiyum eduththu
thandhom thandhaai yetriduvaai (2)
1. vazhangida kaniyo unavo indri
vaadidum variyor palar iraiva (2) - verum
vizhineer viyarvai vaedhanai andri
vaeredhum allaa nilai iraiva
2. unakkena ennai vazhangidum vaelai
unnarul ivarkkaaik kaetkinrom (2) - engal
manam porul aatral anaiththaiyum ivardham
manaththuyar neenga padaikkinrom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.